SPEED KNOTTING SERVICE

Wednesday, January 27, 2010

சிந்திக்க வேண்டும் தமிழா!!!

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்
ஒருவர் கேட்டார்
-எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?
நான் கேட்டேன்-கஷ்டபடாமல் எப்படி வாழ்க்கையை ஓட்டமுடியும்?
அவர் சிரித்தபடி சொன்னார்-என்னைப் பார்,
ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கிடுவேன்,
போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்,
உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,
உயர் சிகிச்சை பெற்றிடுவேன் ராஜமரியாதையுடன்!!!
உழைக்காமல் எப்படியப்பா இத்தனையும் முடியும்?
முதலாமவர் சிரித்தபடி கேட்டார்-நான் யார் தெரியுமா?
தமிழ் நாட்டுக் குடிமகன்
என் நாட்டில் உணவுக்கு அரிசி ரூபாய்,
சமைப்பதற்கு கேஸூம் அடுப்பும் இலவசம்,
பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்,
குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்
எதற்காக உழைக்க வேண்டும்
?
நான் கேட்டேன்-உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?
பலமாக சிரித்த படி உரைத்தார்,
நான் எதற்கு உழைக்க வேண்டும் !!!
வியந்து போனேன் நான் !!!
என் உயிர்த் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும் ?
இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு,
ஒன்று கையூட்டு மற்றொன்று பிச்சை !!!
இதில் நீ எந்த வகை எதை எடுத்துக்கொள்வது ?
உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய் இலவசம் நின்று போனால் உன் நிலை !!!
உழைப்பவர் சேமிப்பைக் களவாடத் தலைப்படுவாய் !!!
இதே நிலை தொடர்ந்தால் இலவசம் வளர்ந்தால்
அமைதிப்பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை
இன்னும் வெகு தொலைவில் இல்லை
.
தமிழா விழித்தெழு உழைத்திடு !!!
நாளைய தமிழகம் நம் கையில்,
உடன்பிறப்பே சிந்திப்பாயா !!!
மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!! 
Download As PDF